2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மூதூரில் நிகழ்வு

Super User   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும்   பாதுகாப்புக்குமான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று இன்று திங்கட்கிழமை மூதூரில் இடம்பெற்றது.

மூதூர் புனித அந்தோனியார் மண்டபத்தில் அமைப்பின் பணிப்பாளர் வண பிதா. வீ.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற, இந்நிகழ்வில் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் எஸ்.ஆர்.ஜி.திட்ட முக்கியஸ்தர்களான சூசான் வோல்ட், பிரட் மேஸி, மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன், சட்டத்தரணி எஸ்.தில்லைராசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதோடு மனித உரிமைகள்   பயிற்சிநெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0

  • Chan Tuesday, 11 December 2012 06:21 AM

    நல்லம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .