2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு வேலைத்திட்டம் திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தால் பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்டது.

எகெட் கரித்தாஸ் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இவ்வேலைத்திட்டத்தில்  தமிழ்மொழி மூலம் கடமையாற்றும் 30 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர். திருகோணமலை, சீனக்குடா, பதவிசிறிபுர, ஹோரன்கடவல, கந்தளாய், மூதூர், மொரவேவ,  கிண்ணியா, குச்சவெளி, தம்பலகாமம் ஆகிய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸ்  உத்தியோகஸ்தர்களே இதில் பங்குகொண்டனர்.

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் மனித உரிமைகள் பிரிவுக்கான இணைப்பாளர் க.சூரியகுமாரி தலைமையில் நடைபெற்ற இவ்வேலைத்திட்டத்தில்    மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்ட ஆணையாளர் பிரான்சிஸ் குளோரி இவர்களுக்கான  பயிற்சிகளை  வழங்கினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .