2025 மே 10, சனிக்கிழமை

வெள்ள அபாயம் குறித்து முன் ஆயத்தத்துடன் செயற்படுமாறு கிழக்கு முதல்வர் பணிப்புரை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத், சி.குருநாதன்)

கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அபாயம் குறித்து முன் ஆயத்தத்துடன் செயல்படுமாறு  கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மாகாண அதிகாரிகளுக்கு பணிப்புரையொன்றை இன்று விடுத்துள்ளார். இப்பணிப்புரை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சமூக சேவை அதிகாரிகள் ஆகியோருக்கு விடுக்கப்பட்டடுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்த வரும் அடை மழை காரணமாக தற்போதைய நிலையில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சில தாழ்ந்த பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இம்மழை தொடரும் பட்சத்தில் போக்குவரத்துத் தூண்டிப்பு, மக்கள் இடம் பெயர்வு ஏற்படவாய்ப்பள்ளது. இதனால் இவர்களுக்கான உணவு உள்ளிட்ட இதர தேவைகளையும் வழங்கத் தயாரான நிலையில் இருக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளதோடு மேலதிக தேவைகள் இருக்கும் பட்சத்தில் முதலமைச்சர் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண மக்கள் நீண்ட காலத் துயரை அனுபவித்தவர்கள் என்றும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் துணிகரமான நடவடிக்கையினால் யுத்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டு நிம்மதியான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும், இந்நிலையில் பருவகால மழை அனர்த்த்தினால் பாதிக்கப்படும் போது தாமதமின்றி நிவாரண உதவிகள் வழங்கக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் எதிர்ப்பார்ப்பதாகவும் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X