2025 மே 10, சனிக்கிழமை

திருமலையில் வெள்ளத்தினால் பாதித்த பிரதேசங்களுக்கு முதலமைச்சர் விஜயம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


 (கஜன்
)

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட கிண்ணியா, முதூர், கிரான், கிளிவெட்டி, வெருகல், லங்கா பட்டினம் போன்ற அனைத்து பிரதேசங்களையும் கிழக்கு மாகாண  முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் நேரில் சென்று பார்வையிட்டார்.

கிண்ணியா பூவரசன்தீவு கிராமத்திற்கான தரைவழி பாதை முற்றாக துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதிக்கு இயந்திரப் படகு மூலம் நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த முதலமைச்சர் அப்பிரதேச மக்களுக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாமையும் மேற்பார்வையிட்டார்.

அதேவேளை கிளிவெட்டி, வெருகல், முதூர் பகுதிகளில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கான சமைத்த உணவு,  அவசர உதவிகளுக்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டார்.

வெள்ளமட்டம் மேலும் உயர்வடையும் நிலை தோன்றுமாயின், உடனடி மீட்புப் பணிகளில் ஈடுபட தயார் நிலையில் இருக்குமாறும் ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பான இராணுவம், கடற்படை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சரின் இவ்விஜயத்தின் போது பிரதேச செயலாளர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், போலீஸ் பொறுப்பதிகாரிகள், இராணுவ பொறுப்பதிகாரி, கடற்படை பொறுப்பதிகாரி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சஹீத் உட்பட பல முக்கிய அதிகாரிகள் இணைந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X