2025 மே 10, சனிக்கிழமை

மூதூர் பீஸ்-ஹோம் நிறுவனத்தின் கலந்துரையாடல் இடைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 04 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத்)

மூதூர் பீஸ்-ஹோம் நிறுவனத்தால் இன்று வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த  கலந்துரையாடலொன்று மூதூர் பிரதேச செயலாளரின் தலையீட்டைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சுனாமியால்   பாதிக்கப்பட்டு இற்றைவரை நிரந்தர வீட்டைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வீட்டைப் பெற்றுக்கொடுக்கும் பணியில் உதவும் நோக்கில் பீஸ்-ஹோம்  நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலைமையை அறிந்துகொள்வதற்காக கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டிருந்தது.    இக்கலந்துரையாடலே இவ்வாறு  இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலக எல்லைக்குள் கலந்துரையாடலொன்றை எவராவது நடத்துவதாக இருந்தால் பிரதேச செயலாளரின் முன் அனுமதி பெறப்பட வேண்டுமென  பிரதேச செயலாளர் என்.பிரதீபனால்   கூறப்பட்டதைத் தொடர்ந்தே இக்கலந்துரையாடல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0

  • islamiyan Tuesday, 08 January 2013 03:45 PM

    முஸ்லிம் என்றால் அவருக்கு பொறுக்காது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X