2025 மே 10, சனிக்கிழமை

கனடாவின் உயர்ஸ்தானிகர் திருமலை ஊடக இல்லத்திற்கு விஜயம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கஜன்


கனடாவின் உயர்ஸ்தானிகர் ரொபேர்ட் மெக் டோவுகள்  திருகோணமலை ஊடக  இல்லத்திற்கு நேற்று திங்கட்கிழமை மாலை வருகை தந்தார்.

இலங்கையின் 65ஆவது சுதந்திரதின  வைபவத்தில் கலந்துகொள்வதற்காக அவர் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 

இதன்போது திருகோணமலை ஊடக இல்லத்தில் மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை அவர் சந்தித்து கலந்துரையாடினார்.

கனடா உயர்ஸ்தானிகராலயத்தின் நிதியுதவியுடன் தேடலுக்கான பொதுமையம் ஊடகவியலாளர்களுக்கு நடத்தும் பயிற்சியின் செயற்பாடுகளையும் அவர்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளையும் அவர் கேட்டறிந்துகொண்டார்.

இந்நிலையில், ஊடகவியலாளர்கள் சங்க உறுப்பினர்களின் மத்தியில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்

'விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதில் கனடா உறுதியாக நின்று அதனையும் நிறைவேற்றியது. இப்போது சமாதானம் நிலவுகின்றது. நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதற்கு  ஊடகவியலாளர்கள் உறுதுணையாக  நிற்க வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X