2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

காட்டு யானை தாக்கி விவசாயி மரணம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 01 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன்

வெருகல் பிரதேச செயலக பிரிவில் உள்ள வாழைத்தோட்டம் என்ற கிராமத்தைச் சேர்ந்த  69 வயதான வடிவேல் புண்ணியமூர்த்தி என்பவர் காட்டு யானை தாக்கியதால் உயிரிழந்தார்.

இச்சம்பவம் வியாழக்கிழமை நண்பகல் அளவில் வெருகல் பிரதேச செயலக பிரிவில் ஆனைத்தீவு என்ற இடத்தில் இடம்பெற்றது. ஆனைத்தீவு என்ற இடம் திருகோணமலை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் வெருகல் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

இவர் தனது தோட்டத்தில் எள்ளுத்தானியத்தை விதைத்துக்கொண்டிருந்த போது வயல் வெளியூடாக தன்னம்தனியனாக வந்து காட்டு யானை ஒன்று தனது தும்பிக்கையால் இவரைத் தூக்கி நிலத்தில் அறைந்து கொன்றதாக அவரது உறவினர்கள் அப்பகுதி கிராமசேவை உத்தியோகர்த்தரிடம் தெரிவித்தனர். அந்த இடத்திலேயே அவர் மரணமானார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X