2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு விவசாய அமைச்சு அலுவலகம் மீது தாக்குதல்

Super User   / 2013 மார்ச் 20 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

கிழக்கு மாகாண விவசாய அமைச்சு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் இணைப்புச் செயலாளர் அனிஸ்டஸ் ஜெயராஜினாலேயே அமைச்சு அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை வரோதய நகர் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண விவசாய அமைச்சு அலுவலகத்திற்கு புகுந்த அனிஸ்டஸ் ஜெயராஜ் அலுவலகத்தை தாக்கியதுடன் பொருட்கள் சிலவற்றிற்கு சேதம் ஏற்படுத்தியதுடன் அங்கிருந்த அதிகாரிகளையும் அச்சுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் அதிகாரிகள் முதலமைச்சர், மாகாண செயலாளர், விவசாய அமைச்சின் பதில் செயலாளர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளனர். இந்த பிரச்சினை தற்போது சுமுகமாக தீர்த்துவைக்கப்பட்டுள்ளது என பெயர் குறிப்பிடவிரும்பாத கிழக்கு மாகாண சபையின் உயர் அதிகாரியொருவர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

"தொடர்பாடலில் ஏற்பட்ட தவறு காரணமாவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது. அதாவது சாரதியொருவரை விடுவித்து தரும்படி அமைச்சரின் அலுவலகத்தினால் கேட்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள்  மேற்கொள்ளப்படவில்லை இதனையடுத்தே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது குறித்த பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது" என அந்த உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் இணைப்புச் செயலாளர் அனிஸ்டஸ் ஜெயராஜை தொடர்புகொண்டு வினவியபோது,

"கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சிற்கான  பிரதம கணக்காளருடன் மன வருத்தங்கள் ஏற்பட்டன. இதனை முறையிட சென்றபோது கணக்காளரின் கதவின் கண்ணாடி என்னால் சேதமாக்கப்பட்டது.

பின்னர் இது தொடர்பாக மாகாண விவசாய அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், மாகாண பிரதம செயலாளர் ஆகியவர்களுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினை சுமுக நிலை கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் அதிகாரிகள் தற்போது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்"  என்றார்.

You May Also Like

  Comments - 0

  • Hari Wednesday, 20 March 2013 03:01 PM

    என்ன வியாக்கியானம் இது. தரம் 1 மாணவர்க‌ளின் சண்டைபோல் விளக்கம் சொல்லுகிறார்கள்.

    Reply : 0       0

    vallarasu Wednesday, 20 March 2013 03:27 PM

    பெயர் மட்டும் கிழக்கு மாகாண அமைச்சு. இந்த முஸ்லிம் பிர‌ச்சினை நடக்கும்போது உங்கள் அமைச்சு கூடியதா?? ஏதாவது ஒரு கண்டனம் தெரிவித்தீர்களா?? எங்கே உங்கள் மற்ற அமைச்சர்கள்... வாங்கோ தேர்தல் வந்தால்...

    Reply : 0       0

    saruga Wednesday, 20 March 2013 05:35 PM

    இணைப்பு செயலாளர் படமா காட்டுறார்?

    Reply : 0       0

    jesmin Thursday, 21 March 2013 09:22 AM

    வாய் திறந்தால் அமைச்சுப்பதவி போய்விடுமே. இப்போது எமது முஸ்லிம் தலைவர்கள் வாய் திறப்பது கொட்டாவி விடுவதற்கும் சாப்பிடுவதற்கு மட்டுமே. எச்சிலைக் கூட விழுங்கிக் கொள்ளுகின்றார்கள்.

    Reply : 0       0

    ibnu wazeer Thursday, 21 March 2013 09:24 AM

    அமைச்சருக்கு அனுபவம் தேவை...

    Reply : 0       0

    Anistus Jayarajah Monday, 25 March 2013 05:09 AM

    செய்திகளின் உண்மை தன்மையை கண்டறிய நாம் கற்றுக் கொள்வது எப்போது?

    பக்கச் சார்பான செய்திகளின் விளைவே தென் கிழக்காசிய நாடுகளின் இன்றுள்ள பிரச்சினைகளின் அடிப்படை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X