2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ.சு.ஆ சங்கத்தின் திருகோணமலை கிளை அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2013 ஜூன் 29 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கீதபொன்கலன்


ஸ்ரீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கத்தின் திருகோணமலைக் கிளை நேற்று வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தித்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பிரதம அமைப்பாளருமான சுசந்த புஞ்சிநிலமேயின் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

திருகோணமலை தேர்தல் தொகுதியின் பல்வேறு பாடசாலைகளையும் சேர்ந்த 325 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதுடன் சங்கத்தில் அங்கத்துவமும் பெற்றுக்கொண்டனர்.

சங்கத்தின் முதலாவது நிர்வாகக்குழுவும் அங்கத்தவர்கள் மத்தியில் இருந்து தெரிவு செய்யப்பட்டது.

இதன் தலைவராக அ.ஆ.காதரும் செயலாளராக லக்ஷ்மன் பாலசூரியவும் பொருளாலராக ஆர்.ஜெரோமும் மற்றும் மேலும் 24 நிர்வாக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X