2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

திருமலை ரொட்டரிக்கழகத்திற்கு புதிய தலைவர்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 30 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸ்.கீதபொன்கலன்


திருகோணமலை ரொட்டரிக்கழகத்தின் 35ஆவது தலைவராக நல்லதம்பி துரைராஐக் ரகுராம் நேற்று சனிக்கிழமை மாலை பதவியேற்றுள்ளார்.

1979ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திருகோணமலை ரொட்டரிக்கழகத்தின் 2013ஆம் 2014ஆம் ஆண்டுகளுக்கான தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்த ரகுராமிடம் முன்னாள் தலைவர் பெ.றொ.ன்ஐயக்குமார் தலைமைப் பதவியை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இப்பதவியேற்பு நிகழ்வில் திருகோணமலை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய அருட்கலாநிதி கிங்ஸிலி சுவாம்பிள்ளை ஆண்டகை முதன்மை அதிதியாகவும் ரொட்டரிக்கழகத்தின் மாவட்டம் - 3220 இன் உதவி மாவட்ட ஆளுநர் வே.ராமநாதன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

மேலும், இலங்கை முழுவதும் ரொட்டரிக்கழகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வுச் செயற்றிட்டமான 'சீனி மீனி' செயற்றிட்டத்தை திருகோணமலையில் பல்வேறு நிகழ்வுகள் மூலம் நடைமுறைப்படுத்தியதன் அடிப்படையில் தேசிய மட்டத்தில் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தைப் பாராட்டி வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டது. 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X