2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம் மகா வித்தியால அதிபர் தலைவராக தெரிவு

Super User   / 2013 ஜூன் 30 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்


ஸ்ரீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கத்தின் திருகோணமலை தொகுதியின் புதிய தலைவராக புல்மோட்டை அறபாத் முஸ்லிம் மகா வித்தியால அதிபர் அயினியப்பிள்ளை அப்துல் காதர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே  தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது சங்கத்தின் செயலாளராக லக்ஷ;மன் பாலசூரிய, பொருளாளராக ஆர்.ஜெரோம் ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகளும்  தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் குச்சவெளிப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காமினி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தகர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X