2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மூதூர் தள வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரி பேரணி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 01 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எச்.அமீர்

மூதூர் தள வைத்தியசாலையில் நிலவும் பௌதீக மற்றும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி நாளை செவ்வாய்க்கிழமை பேரணியொன்று இடம்பெறவுள்ளது.

வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பேரணி மூதூர் பெற்றோல் நிலையச் சந்தியிலிருந்து வைத்தியசாலைவரை இடம்பெறவுள்ளதாக வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே.எம்.தௌபீக் தெரிவித்தார்.

மூதூர் தள வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், துணை மருத்துவச் சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட  ஆளணிப் பற்றாக்குறையாலும் பௌதீக வளப்பற்றாக்குறையாலும்  சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளர்கள் தொடர்ந்து  சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X