2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

முள்ளிப்பொத்தானை நகரில் டெங்கு சோதனை

Kogilavani   / 2013 ஜூலை 06 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு தம்பலகமம் பிரதேச சபைக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை நகரில் தீவிர டெங்கு சோதனை நடவடிக்கைகள நேற்று வெள்ளிக்கிழமை  முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, தமது சுற்றாடலை டெங்கு நோய் பரவக்கூடிய வகையில் வைத்திருந்த பலருக்கு இறுதி எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதுடன் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

தம்பலகமம் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.சுபியான் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் தம்பலகமம் பொது சுகாதார வைத்தியப் பணிமனை அதிகாரிகள் மற்றும் தம்பலகமம் பொலிஸார் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X