2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

திருமலை மாணவர்கள் கொலை; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


2006ஆம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 அதிரடிப் படையினரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதவான் அஷ்ஹர் முன்னிலையில் குறித்த சந்தேகநபர்கள் இன்று திங்கட்கிழமை ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போதே நீதவான் இந்த உத்தரவினை மேற்கொண்டார். எனினும் இந்த வழக்கு விசாரணைகள் ஒக்டோபர் 29ஆம் திகதியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் கொலை தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடி படையினர் சந்தேகத்தின் பேரில் கடந்த ஜுலை 5ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .