2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Super User   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, மொறவௌ - ரொட்டவௌ பகுதியில் புதையல் தோண்டிய நான்கு பேரை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தி பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் அனுராதபுரம், மதவாச்சி மற்றும் ஹொரவப்பொத்தான ஆகிய பகுதியை சேர்த்தவர்கள் எனவும் அதில் இருவர் முன்னால் இராணுவ வீரர்கள் எனவும்
ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சந்தேகநபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மொறவௌ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .