2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கத்திக் குத்துக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதி

Super User   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எச்.அமீர்

மூதூர்  பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர்  மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற  கிரிக்கட் போட்டியொன்றின் போது கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தோப்பூர், அல்லை நகரை சேர்ந்த 22 வயதான அன்சார் இர்பான் என்பவரே கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார்.விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த இரு அணிகளுக்கிடையே   ஆட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பார்வையாளர்கள் சிலரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போதே குறித்த நபர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். இந்த சம்பவத்தோடு தொடர்புடைய ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X