2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உலக வங்கியின் தென்னாசிய பிராந்திய உதவித் தலைவர் திருமலை விஜயம்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 26 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸ்ரனிஸ்லஸ் கீதாபொன்கலன்


உலக வங்கியின் நிதிப் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்களை ஆராய்வதற்காக உலக வங்கியின் தென்னாசிய பிராந்தியத்திற்கான உதவித் தலைவர் பிலிப்பி எச் லீ ஒயிருவ் நேற்று (25) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

வைத்தியசாலைக்கு வருகை தந்த உலக வங்கியின் பிரதிநிதிகள், வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் மற்றும் மாகாண சுகாதாரத்துறை உதவிச்செயலாளர், மாகாணப் பணிப்பாளர், பிராந்தியப் பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலைக் குழுத்தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவினருடன் வைத்தியசாலையின் நிர்வாக செயற்பாடுகள், தேவைகள், எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விரிவாகக்கேட்டறிந்து கொண்டனர். அத்துடன் வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளுக்கும் உலக வங்கிப் பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இலங்கைக்கு வஜயம் செய்த உலக வங்கியின் உதவித் தலைவர் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடினார் என்று உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவு பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பிராங் காயிஸி கொளட்ஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X