2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வீடமைப்பு அதிகார சபையை உருவாக்க கிழக்கு மாகாண சபை அங்கீகாரம்

Super User   / 2014 ஜனவரி 29 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை மாகாண சபை நேற்று வழங்கியுள்ளது என மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

வீடமைப்பு அதிகார சபையை உருவாக்குவதற்கான மாகாண நியதிச் சட்டக் குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாண வீடமைப்புக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில்  நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாகாண சபை அமர்வில் என்னால் சமர்ப்பிக்கபட்ட இப்பிரேரணைக்கான அனுமதி ஏகமனதாக கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

"கிழக்கு மாகாண ஆளுனரின் அனுமதியை பெற்றவுடன் கிழக்கு மாகாணத்திற்கான வீடமைப்பு அதிகார சபையை அமைக்கும் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படவுள்ளது" மாகாண அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .