2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

கிழக்கில் மஹிந்த ராஜபக்ஷ பாடசாலை

Super User   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸ்ரனிஸ்லஸ் கீதபொன்கலன், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்


கிழக்கு மாகாணத்தில் மஹிந்த ராஜபக்ஷ  சிறப்பு பாடசாலை இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

மஹிந்தோதய வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்ளும் இந்த பாடசாலையை திருகோணமலை மாவட்டத்தில் நிர்மாணிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது போன்ற பாடசாலையொன்று ஏற்கனவே ஹோமாகம பிரதேசத்தில் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

நெனச செயற்த்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை, உவர்மலை விவேகானந்த கல்லூரியில் சனிக்கிழமை இடம்பெற்றது.இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"மஹிந்த ராஜபக்ஷ  சிறப்பு பாடசாலையில தற்போது சகல மாகாணங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. இந்த பாடசாலையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் சமகாலத்தில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். அத்துடன் திருகோணமலை பிரதேசத்தில் கல்விக் கல்லூரி ஒன்று இல்லை என்ற குறை மிக நீண்ட காலமாக உள்ளது. இந்த ஆண்டில் கல்விக் கல்லூரியொன்றை இங்கு ஆரம்பித்து வைக்கவுள்ளோம்" என்றார்.

இந்த நிகழ்வின்போது கிழக்கு மாகாணத்திலுள்ள 121 பாடசாலைகளுக்கு டயலொக் நிறுவனத்தின் அநுசரணையில் 65,000 ரூபா பெறுமதியுடைய 32 அங்குல எல.;ஈ.டீ தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பிரதி அமைச்சர்களான எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, சுசந்த புஞ்சிநிலமே மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .