2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மாகாண சுகாதார அமைச்சின் செயலாளாராக கருணாகரன் நியமனம்

Super User   / 2014 பெப்ரவரி 13 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளாராகக்  கே.கருணாகரன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.  மாகாண சுகாதார அமைச்சின் செயலாளாராக கடமையாற்றி கலாநிதி எஸ். அமலநாதன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

இலங்கை நிருவாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான கலாநிதி எஸ்.அமலநாதன் பொருளியல் துறையின் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கிழக்கு மாகாண சபையின் செயலாளராக கடமையாற்றிய கே.கருணாகரண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் செயலாளராக எம்.சரீப்தீன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் இந்த நியமனங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜய விக்ரமவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .