2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக ராஜ்குமார் தெரிவு

Super User   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


திருகோணமலை மாவட்ட  ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக வடமலை ராஜ்குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் சங்கத்தின் 11ஆவது பொதுக்கூட்டம் திருகோணமலை, விகாரை வீதியிலுள்ள ஊடக இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது தலைவராக வடமலை ராஜ்குமாரும் மற்றும் செயலாளராக கே.பீ.லக்மாலும் பொருளாளராக ஏ.எல்.ரபாய்டீன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

அத்துடன் செயற்குழு உறுப்பினர்களாக ஏ.எம்.மஸாஹிர், எம்.ஐ.றிகாஸ் அஹமட், எஸ்.நவரட்ணம், சாகிர் கஸ்ஸாலி, எப். முபாரக், எம்.எம்.ரிசாட்,ஏ.டப்ளியு.இர்பான், ஏ.அமரஜீவ,  கே.லோஜினி மற்றும் ஓ.கியாஸ் சாபி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இங்கு உரையாற்றிய புதிய தலைவர் வடமலை ராஜ்குமார்,

"திருகோணமலை மக்கேசர் விளையாட்டு மைதானத்தில் அபிவிருத்தி பனியின் போது தென்பட்டதாக கூறப்படும் எலும்பு எச்சங்கள் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் பொலிஸாரினால் அனுமதி மறுக்கப்பட்டமை ஊடக சுதந்திரம் தொடர்பான கேள்வியை நம்மத்தியில் எமுப்பியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக திருகோணமலை பிரதி பொலிஸ் அத்தியட்டசகருக்கு கடிதம் மூலம் தெரிவிப்பதாகவும் ஜனநாயகத்தின் சக்திகளாக செயற்படம் ஊடகங்களுக்கும் ஊடகவியளாளர்களும் இவ்வாறு தடைசெய்யப்பவது ஆரோக்கியமானதல்ல" என்றார்

இவ்வாறான  சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்ட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X