-ஒலுமுதீன் கியாஸ்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, எதிர்வரும் செவ்வாய்கிழமை (11) திருகோணமலைக்கு விஜயம் செய்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் பங்களிப்பு மூலம் நிலைபேறான அபிவிருத்தி எனும் தொனிப் பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டம் ஒன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை சிங்கள மத்திய மகா வித்தியால மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காகவே பசில் வருகைதரவுள்ளார். மாவட்டம் முழுவதையும் சேர்ந்த சுமார் 4500 பேர் இக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது.
புற நெகும திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பல கட்டடங்களின் திறப்பு விழா வைபவங்கள் புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதிலும் அமைச்சர் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
கிண்ணியா, சேருவில, கோமரங்கடவெல போன்ற பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் அன்றைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளன.