2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிராம சேவகர்கள் விரைவில் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வார்கள்: செ.அருள்ராசா

A.P.Mathan   / 2014 மார்ச் 08 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
 
திருகோணமலை மாவட்டத்துக்காக நியமிக்கப்பட்ட கிராம சேவகர்கள் விரைவில் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வார்கள் என திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செ.அருள்ராசா இன்று (08) தெரிவித்தார்.
 
பொது நிர்வாக அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு அமைவாக நியமிக்கப்பட்ட கிராம சேவகர் நியமனம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 
 
64 கிராம சேவகர்கள் திருகோணமலை மாவட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ் மொழி மூலம் 36 பேரும் சிங்கள மொழி மூலம் 28 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில - திருகோணமலை பட்டினமும் சூழுலும் பிரதேச செயலகப்பிரிவுக்கு 16 பேரும், பதவி ஸ்ரீபுர பிரதேச செயலப் பிரிவுக்கு 12 பேரும், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்கு 06 பேரும், கோமரங்கடவெல பிரதேச செயலகப் பிரிவுக்கு 03 பேரும், தம்பலாகமம் பிரதேச செயலகப் பிரிவுக்கு 02 பேரும், கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுக்கு 06 பேரும், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்கு 12 பேரும், மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்கு 09 பேரும், சேருவில பிரதேச செயலகப் பிரிவுக்கு 5 பேரும் அடங்குவர்.
 
இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட கிராம சேவகர்களுக்கு நிர்வாக மற்றும் காணி சம்மந்தப்பட்ட விடயங்களில் சுமார் 12 வார காலம் தொடர்ச்சியாக சேவை முன் பயிற்சி வழங்குவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயம் நடவடிக்கை எடுத்துள்ளது. பின்பு ஜூலை முதல் வாரத்தில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும். அதுவரை அவர்கள் பயிலுநர்களாகக் கடமையாற்றுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X