2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 மார்ச் 10 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை நகரின் மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தின் முன் திங்கட்கிழமை  (10) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட ரனவீர குடும்பங்களுக்கான சங்கத்தினராலும் பிரஜைகள் அமைப்பு மற்றும் பௌத்த விகாரைகளின் மத குருமார் ஆகியோர் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்வார்ப்பாட்த்தில் கிழக்கு மாகாணசபை தவிசாளர் ஆரியவதி கலபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களால் கையொப்பம் இடப்பட்ட ஜெனீவா தீர்மானத்திற்கு எதிர்பு தெரிவிக்கும் செய்தி அடங்கிய மகஜர் ஒன்று இதன்போது கிழக்கு மாகண ஆளுனர் றியல் அட்மிரல் மொஹான் விஜியவிக்கிரமவிடம் கையளிக்கப்பட்டது. 

மகஜரினை இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபகஷவிற்கும்   அனுப்பி வைப்பதாகவும் ஆளுனர் இதன்போது தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X