2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கடற்படையினர் இருவர் பலி: நால்வர் காயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, போடவக்கட்டு மதுரங்குடா 41 ஆவது மைல்கல்லுக்கு அருகில் கடற்படையினரின் டிபென்டர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர் என்று குச்சவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியிலிருந்த குழிக்குள் டயர்கள் விழுந்துவிடாமல் திருப்பியபோதே வாகனம் நடுவீதியிலேயே தலைகீழாக புரண்டுவிபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலை டொக்யாட் கடற்படைத்தளத்திலிருந்து திரியாய் வலகம்பா தளத்திற்கு சென்று திரும்பிய  டிபென்டர் ரக வாகனமே இவ்வாறு தடம் புரண்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X