2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் எழுவர் திருமலையில் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 20 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 07 பேரை நேற்று வியாழக்கிழமை கைதுசெய்ததாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை கைதுசெய்த கடற்படையினர் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

மேலும், இவர்களின் படகொன்றும் டொக்கையாட் கடற்படைத்தளத்தில்  தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இம்மீனவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை  ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X