2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

இரத்ததான முகாம்

Kogilavani   / 2014 ஜூலை 14 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கீதபொன்கலன்


இன்னுமொரு உயிரைக் காப்போம் என்ற தொனிப்பொருளில்  ஞாயிற்றுக்கிழமை(13) இரத்ததான முகாமொன்று திருகோணமலை மெதடிஸ்த ஆலயத்தில் நடைபெற்றது.

மெதடிஸ்த திருச்சபையின் இளைஞர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் இரத்ததான நிகழ்வில் 47 பைந்து இரத்தம் தானமாக பெறப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆலய அங்கத்தவர்களுடன்  பொதுமக்களும் இரத்ததானம் செய்தனர்.

சென்ற வருடமும் மெதடிஸ்த திருச்சபை இரத்ததான நிகழ்வொன்றை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .