2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

விபத்தில் போக்குவரத்து பொலிஸார் இருவர் காயம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, கண்டி வீதி – 4 ஆம் மைல் கல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(24) இடம்பெற்ற விபத்தில் போக்குவரத்து பிரிவு பொலிஸார் இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை. பொது வைத்தியசாலையில் அனுமதிககப்பட்டுள்ளனர்.

அம்பாறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிகளுடன்  பயணித்தே தனியார் பஸ்ஸே இவர்கள் மீது மோதி உள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில், திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் கடமைபுரியும் புஸ்பகுமார,   பண்டார ஆகியோர் காயமடைந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து  குறித்து திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .