2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியயமனம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றுகின்ற 625 உழியர்களுக்கு நிரந்தர  நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கையை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மேற்கொண்டுள்ளார்.

இதன் அடிப்படையில், முதற்கட்டமாக அம்பாறை நகர சபையில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிவரும் 23 ஊழியர்களுக்கான நிரந்தர நியமனக்கடிதங்கள் திருகோணமலையில் அமைந்துள்ள முதலமைச்சர் பணிமனையில் வைத்து வெள்ளிக்கிழமை (12) முதலமைச்சரினால்  வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம் முதலமைச்சரின் உதவிச் செயலாளர் ஏ.டி.எம். ராபி முதலமைச்சரின் இணைப்புச்செயலாளர் எஸ்.அஸ்வத்கான், அம்பாறை  நகரசபையின் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தற்காலிக சேவை ஈடுப்பட்டுள்ள ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்படவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X