Thipaan / 2015 ஜனவரி 25 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அப்துல் பரீத்
குறிஞ்சா கேணிக்கு புதிய தற்காலிக பாலம் அமைக்க தேவையான பொருட்கள் எதிர்வரும் 27.01.2015ஆம் திகதி கொண்டுவரப்பட்டு தற்காலிக பாலம் அமைக்கப்படும் என பார்வையிட வந்த குழுவினர் தெரிவித்தனர்.
மாணவர்கள், பொதுமக்களின் நலன் கருதி குறிஞ்சாகேணிக்கு தற்காலிக பாலம் அமைக்க, கிராமிய தற்காலிக பால அமைப்பு உதவி பணிப்பாளர் அமரவீர, திரு. ஸ்டாலின் தலைமையிலான குழுவொன்றை குறிஞ்சாகேணி பாலத்துக்கு வெள்ளிகிழமை (23) அனுப்பியிருந்தார்.
ஏற்கனவே இங்கு தற்காலிக பலம் அமைப்பதற்கு கொண்டுவரப்பட்ட இரும்பு கேடர்களை பொருத்த முடியாத நிலையில் சேதமைடைந்துள்ளதாக பார்வையிட வந்த குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் எதிர்வரும் 27.01.2015ஆம் திகதி கொண்டுவரப்பட்டு தற்காலிக பாலம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ எம் மகஹரூப்பின் வேண்டுகோளுக்கு இணங்க வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பண்டாரவினால், குறிஞ்சாகேணிக்கு தற்காலிக பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026