Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜனவரி 30 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், வியாழக்கிழமை (29) மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
திருகோணமலை வித்தியாலயம், இராஜவரோதயம், கஸ்கிசன் ஆகிய வீதிகள் மற்றும் பொதுச்சந்தைப் பகுதிகளிலும் அங்குள்ள வீடுகளிலும் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை இவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன், வித்தியாலய வளாகமும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் சிரமதானம் செய்யப்பட்டது.
வித்தியாலய அதிபர் திருமதி ஐ.எம்.முரளிதரன், திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி வி.விஜயகுமார். சுகாதார பரிசோதகர்கள் வி.சரவணபவன், டீ.கோபகன், சுகாதார உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் என பலர் கலந்துகொண்டனர்.
அண்மைக்காலமாக திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், அதனை கட்டுப்படுத்த சூழல் பராமரிப்பு தொடர்பான பணிகளை அரசு மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
29 minute ago
41 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
41 minute ago
51 minute ago