Sudharshini / 2015 ஜனவரி 31 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, சாம்பல்த்தீவு பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மீன் சந்தையை உப்புவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி; வெள்ளிக்கிழமை (30) திறந்து வைத்தார்.
திருக்கோணமலை, கடலன்னை மீன் வியாபாரிகள் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன், பட்டிணமும் சூழலும் உப்புவெளி பிரதேசசபைத் தலைவர் திரு.விஜயேந்திரன்; தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினர்களாக பட்டிணமும் சூழலும் பிரதேசசபையின் உபதலைவர் நிசாந்தன், நகரசபை உறுப்பினர் திரு.கோகுல்ராஜ், சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், மீன் வியாபாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

3 hours ago
26 Mar 2026
26 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
26 Mar 2026
26 Mar 2026