2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

குறிஞ்சாகேணிக்கான தற்காலிக பாலம் நிர்மாணம்

Thipaan   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த குறிஞ்சாகேணி தற்காலிக பாலம்; நிர்மாணிக்கப்பட்டு திங்கட்கிழமை முதல் மக்கள் பாவனைக்காகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை மாத காலமாக தடைப்பட்டிருந்த போக்குவரத்து தற்காலிக பாலம் நிர்மாணிக்கப்பட்டதையடுத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

நிறைவு பெற்ற தற்காலிக பாலத்தினை திருகோணமலை மாவட்ட ஐ.தே.க. தவிசாளரும் மூதூர் தொகுதி அமைப்பாளருமான எம்.ஏ.எம். மஹரூப் பார்வையிட்டார்.

 பால நிர்மாண வேலைகளில் ஈடுபட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிராமிய பால பிரிவு ஊழியர்களுக்கும் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கும் கிண்ணியா மக்கள் சார்பாக நன்றியும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .