Princiya Dixci / 2015 மார்ச் 25 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக ஏ.நசுவர்கான், புதன்கிழமை (25) கடமையேற்றுள்ளார்.
கிண்ணியா வலயக் கல்விக் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.ஐ.சேகு அலி, மட்டக்களப்பு பிராந்திய வலயக் கல்வி அலுவலகத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக இடமாற்றப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கல்வி நிருவாகச் சேவையைச் சேர்ந்த இவர், ஜாமி ஆ. நளிமிய்யா கலாபீட பட்டதாரியாவார்.
ஆரம்பத்தில் வடக்கு, கிழக்கு மாகாண மற்றும் கிண்ணியா பிரதேச செயலகத்திலும் கலாசார உத்தியோகஸ்தராக கடமையாற்றிய இவர், பின்னர் கல்வி நிருவாகச் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் திகிண்ணியா தாருள் உலூம் மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் கிண்ணியா கல்வி வலயத்தில் நிருவாகத்துக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .