Thipaan / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை சம்பூர் பிரதேசத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை (03) காலை விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, அகதி முகாம்களில் வாழுகின்ற மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற 235 ஏக்கர் காணியையும் உரிமையாளர்களிடம் கையளிப்பது தொடர்பாகவும் மக்களுடன் கலந்துரையாடினார்.
கட்டைபறிச்சான், சம்பூர், கூனித்தீவு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும் பிரதமர் சென்று அவற்றைப் பார்வையிட்டார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் கூனித்தீவில் தரைமட்டமாக்கப்பட்டிருந்த பத்திரகாளி அம்மன் கோயிலுக்குச் சென்று அவ்விடத்தைப் பார்வையிட்ட பிரதமர், அந்தக் கோயிலை மீள நிர்மாணித்து தருவதாக மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.
பிரதமருடன் திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் மூதூர் தொகுதி அமைப்பாளருமான எம்.ஏ.எம்.மஃறூபும் சென்றிருந்தார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .