Gavitha / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
தம்பலகாமம் சிராஜ் நகர் சுகாதார தாய், சேய் பராமரிப்பு நிலையத்தினை மத்திய மருந்தகமாக தரம் உயர்த்துவதற்கு கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
தம்பலாகமம் பிரதேசத்துக்கு சனிக்கிழமை (4) விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் சிறாஜ் நகர் பிரதேச சுகாதார அபிவிருத்தி தொடர்பாக பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய போதே இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் நலனை கருத்திற்கொண்டு ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையமொன்றினையும் அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
இச்சந்திப்பில், போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக், கிண்ணியா பிரதேச சபை உதவி தவிசாளர் கே.எம்.நிஹார்,பிரதி அமைச்சரின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் எம்.யூசுப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago