Suganthini Ratnam / 2015 மே 11 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
திருகோணமலை, சம்பூர் பொதுமயானத்தில் 9 வருடங்களின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை சடலமொன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.நாகேஸ்வரன் தெரிவித்தார்.
சம்பூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட செல்லப்பா இராசமாணிக்கம் (வயது 69) என்பவரின் சடலமே இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டது.
காலஞ்சென்றவர் கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமில் வசித்துவந்திருந்தார்.
சம்பூர் பிரதேசத்தில் ஏற்கெனவே அரசாங்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் மற்றும் கடற்படை உயர் பாதுகாப்பு வலயம் என்று சுவீகரிக்கப்பட்ட காணிகளின் எல்லைக்குள் இந்த மயானம் அமைந்திருந்தது.
முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்கான காணி சுவீகரிப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2012இல் வெளியிடப்பட்டிருந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இரத்து செய்யப்பட்டதை அடுத்து, சம்பூர் பொது மயானம் தற்போது பொதுமக்களின் பாவனைக்கு மீண்டும் கிடைத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .