Princiya Dixci / 2015 மே 25 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சம்பூர் பிரதேச மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஞாயிற்றுக்கிழமை (24) சந்தித்து மீள்குடியேற்றம் தொடர்பாக கலந்துரையாடியதுடன் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.
நீதிமன்றத் தடை நீக்கப்பட்டதன் பின்னர் மீள்குடியேற்ற மக்களின் செயற்பாடுகளை அறியும் வகையில் அவர் இந்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணியும் உடன் சென்றிருந்தார்.
இதேவேளை திருகோணமலை, சம்பூர் பகுதியில் மீள்குடியேற்றத்துக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மீள் குடியேறிவரும் மக்களின் தேவைகள் குறித்து ஆராய்வதற்காக உதவி பிரதம செயலாளர் தலைமையில் 12 அங்கத்தவர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் உடனடியாக சம்பூர் கிராமத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக முதலமைச்சரின் அலுவலகம், திங்கட்கிழமை (25) அறிவித்துள்ளது.
சம்பூர் செல்லும் குழுவினர் மக்களின் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்களை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago