Gavitha / 2015 மே 27 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
சிறுவர் அபிவிருத்தி நிறுவனம் திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 படசாலைகளுக்கு 4.5 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான 2049 பாடசாலை மாணவர் மேசை கதிரைகளை வழங்கி வைத்துள்ளது.
நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில், இவை வழங்கிவைக்கப்பட்டன. கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி. கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் ஆகியோர் இவற்றினை அதிபர்களிடம் கையளித்தனர்.
ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒதுக்கப்பட்ட தளபாடங்களும் சான்றிதழ் அதிபர்களிடம் அதிதிகளால் கையளிக்கப்பட்டது. இவற்றுக்கு புறம்பாக கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 6 பாடசாலைகளைச் சேர்ந்த 12 மாணவர்களுக்கு தலா 5,000 ரூபாய்கள் வைப்பிலிடப்பட்ட வங்கி சேமிப்பு புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை கல்வி வலயத்தில் குச்சவெளி கோட்டத்தில் உள்ள 14 பாடசாலைகளும் திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் உள்ள 16 பாடசாலைகளும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டள்ளது. இத்திட்டத்தில் 3,500 மாணவர்களை இலக்கு வைத்து அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாக சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் திருகோணமலை முகாமையாளர் கே.வினோபவன் தெரிவித்தார்.

31 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago