Suganthini Ratnam / 2015 ஜூன் 04 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்னா
திருகோணமலை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்பணி நோயெல் எம்மானுவேல் கிறிஸ்டியன் நேற்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை ஆயராக பணியாற்றிவந்த ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, பணி ஓய்வு பெற விரும்பியதையடுத்த ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டு முதல் கண்டி தேசிய குருமடத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவந்த அருள்பணி கிறிஸ்டியன் 2011ஆம் ஆண்டு திருகோணமலை முதன்மை குருவாகவும் 2012ஆம் ஆண்டு அம்மறைமாவட்டத்தின் பொருளாளராகவும் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .