2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

புல்மோட்டை குளத்தை புனரமைக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 ஜூன் 11 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

புல்மோட்டை விவசாயக்குளத்தை புனரமைத்துத் தருமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்குளத்தை நம்பி சுமார்  75 விவசாயக் குடும்பங்கள் தமது ஜீவனோபாய  தொழிலான விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றன. இக்குளத்தைப் புனரமைப்பு செய்தால் 120 ஏக்கர் வயல் நிலத்தில் விவசாயம் செய்ய முடியும்;.

கடந்த  ஆட்சிகாலத்தில் இக்குளத்தைப் புனரமைப்பதற்காக 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டபோதும், அரசியல் தலைமைகளின் அழுத்தம் காரணமாக இப்பணம் வேறு பிரதேசத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே, இக்குளத்தை புனரமைக்க சம்பந்தப்பட்டோர் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X