Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக மரபுரிமைத் தளமான காலி கோட்டைக்குள், கனரக வாகனங்கள் பிரவேசிக்க, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் முற்றாகத் தடைவிதிக்கப்படவுள்ளது என, காலி மரபுரிமை மன்றத்தின் தலைவர் சன்ன தாஸ்வத்த தெரிவித்தார்.
கோட்டையைப் பாதுகாக்கும் நோக்கிலே, இந்தத் தீர்மானத்தை மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
இத்தடையுத்தரவின்படி, 3 மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்ட வாகனங்களும், 5 தொன்களுக்கு அதிக எடையுள்ள வாகனங்களும் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படவுள்ளது.
உலக அதிசயங்களுள் ஒன்றாக சேர்த்துக்கொள்வதற்கு பரிந்துரைசெய்யப்பட்ட காலி, டச்சுக் கோட்டைப் பகுதியினுள், கனரக வாகனங்கள் நுழைய, 2009ஆம் ஆண்டே வர்த்தமானி மூலம் தடை விதிக்கப்பட்டது.
எனினும், அந்தச் சுற்றறிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், கோட்டையின் வரவேற்பு வளைவு, லொறியொன்றால் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து எழுந்த புகார்கள், கருத்துகளின் அடிப்படையிலேயே, இந்தப் புதிய தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 1588ஆம் ஆண்டு போர்த்துக்கீசரால் நிர்மாணிக்கப்பட்டு பின்னர், டச்சு மற்றும் ஆங்கிலேயர்களால் புனரமைப்புச் செய்யப்பட்ட குறித்த கோட்டைச் சுவர், உடைந்து விழும் ஆபத்தில் உள்ளதென, காலி மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோட்டைச் சுவர் களிமண்ணால் கட்டப்பட்டுள்ளது எனவும், கோட்டைச் சுவர் மீது நடக்கும் நபர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளது எனவும், இந்நிலைமை நீடித்தால் 10, 15 வருடங்களுக்குள் கோட்டைச் சுவர் இடிந்து விழக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
1 hours ago