2025 மே 03, சனிக்கிழமை

மாத்தறையில் பாரிய தேடுதல் 107 பேர் கைது

Super User   / 2012 ஜூலை 09 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   (சுபுன் டயஸ்)

மாத்தறை மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதல் நடவடிக்கையின்போது 107 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளை,  போதைப்பொருள் கடத்தல் பாலியல் வல்லலுறவுகள், கசிப்பு விநியோகம் போன்ற குற்றங்கள் தொடர்பான இச்சந்தேக நபர்களை கைது செய்வதற்கு 78 பிடியாணைகளும் 46 பகிரங்க பிடியாணைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதம இன்ஸ்பெக்டர் ஒருவர், 7 இன்ஸ்பெக்டர்கள், 24 உதவி இன்ஸ்பெக்டர்கள், 61 பொலிஸ் சார்ஜன்ட்கள், 83 கான்ஸ்டபிள்கள், 5 பெண்  கான்ஸ்டபிள்கள் ஆகியோர் உட்பட 182 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அடங்கிய குழுவினர் இத்தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் மாத்தறை, கந்தற, வெலிகம, டிக்வெல்ல ஆகிய பிரதேசங்களில் இத்தேடுதல்கள் நடத்தப்பட்டன.

காலை 8 மணிக்கு ஆரம்பித்த இத்தேடுதல் நடவடிக்கை இரவு 11 மணிவரை நீடித்தது.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X