2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கதிர்காமம் யாத்திரிகர்கள் விடுதியில் தங்கியிருந்த 5 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 01 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம் துட்டகைமுனு யாத்திரிகர்கள் விடுதியில் தங்கியிருந்த 5 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து கதிர்காமம் பொலிஸார் இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது உடப்பு, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்த 23 முதல் 54 வயது வரையானவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேயாவுக்கு புறப்படும்வரை கதிர்காம யாத்திரிகர்கள் விடுதியில் தங்குமாறு நபரொருவரினால்; இவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய சூத்திரதாரியைக்; கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .