2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

காலி மாவட்ட பிரதம சங்கநாயக்க தேரர் இடைநிறுத்தம்

Super User   / 2012 ஜூலை 10 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்ட பிரதம சங்கநாயக்க தேரர் பதவியை அஸ்கிரிய மஹா விஹாரை இடைநிறுத்தம் செய்துள்ளது. முன்னாள் பிரதம சங்க நாயக்கரான வண. மிகேதுவத்த சுமித்த தேரர் கொள்ளைகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதையடுத்து  இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் நீதிமன்ற வழக்கு முடியும்வரை இத்தீர்மானம் அமுலில் இருக்கும் எனவும் அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் வண. ஆனமடுவ தம்மதாஸி தேரர் தெரிவித்தார்.

காலி மாவட்ட பிரதம சங்கநாயக்க தேரராக வண. மிகேதுவத்த சுமித்த தேரர் 21.09.2009 ஆம் திகதி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாரிய கொள்ளைச் சம்பவங்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். (லக்னா பரணமான்ன)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .