2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர்களால் எனது ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: பேர்ட்டி பிரேம்லால்

Super User   / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களால் தனது ஆதரவாளர்கள் தாக்கப்படுவதாகவும் இவ்வாறான சம்பவங்களை முன்னர் தான் கேள்விப்படவில்லை எனவும் வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்க கூறியுள்ளார்.

"எதிர்க்கட்சியினர் தேர்தலில் வென்ற தருணங்களில்கூட இவ்வாறான தாக்குதல்கள், அச்சுறுத்தல்களை நாம் பார்த்ததில்லை. நேற்றுகூட  எஸ்.எம். ரஞ்சித்தின் ஆதரவாளர்களால் எனது ஆதரவாளர்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர். தேர்தல் முடிந்ததிலிருந்து இது நடைபெறுகிறது' என அவர் கூறினார்.

வட மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பதவி குறித்து கேட்டபோது, "இது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு இது உகந்த தருணமல்ல. முதலமைச்சரை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அவர் சரியான தீர்மானத்தை மேற்கொள்வார் என நம்புகிறேன்" என பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்க  பதிலளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .