2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கஞ்சா புகைத்த நால்வர் கைது

Kanagaraj   / 2013 நவம்பர் 04 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஞ்சா புகைத்தனர் எனும் குற்றச்சாட்டின் பேரில் வெலிகமவை சேர்ந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமது நண்பரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சென்று கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த போதே அந்த நால்வரையும் தாம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகமஇ பெலனவை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் கஞ்சா புகைப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இவர்களை கைது செய்தபோது இவர்களிடம் 250 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.

இந்த சந்தேக நபர்களில் 23 வயதான ஒரு வாலிபனும் அடங்குவர்.

தான் திருமணம் செய்யவுள்ள பெண்ணின் உறவினர்கள் தமது திருமணத்துக்கான ஒழுங்குகள் பற்றி பேசுவதற்காக வீட்டிற்கு வந்திருப்பதாகவும் இதனால் கருணை காட்டி தன்னை விடுவிக்குமாறு இவர் பொலிஸாரிடம் வேண்டிய போதும் பொலிஸார் அதை மறுத்து நால்வரையும் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மாத்தறை குற்றச் செயல் ஒழிப்பு அணி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .