Suganthini Ratnam / 2017 மே 31 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வ.துசாந்தன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்,
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி, பட்டிப்பளைப் பிரதேசத்தில் இன்று பேரணிகள் நடைபெற்றன.
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு வருடமும் மே 31ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுகின்றது.
'துர்நடத்தையை ஒழிப்போம், முறையான மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் கொக்கட்டிச்சோலையிலிருந்தும் அரசடித்தீவிலிருந்தும் ஆரம்பமாகிய பேரணிகள் பட்டிப்பளை பிரதேச செயலகத்தை வந்தடைந்தன.
பட்டிப்பளைப் பிரதேச செயலகம், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம், சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சு, சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இப்பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.
புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி கொடிவாரமும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டது.




1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago