2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அகுவேரோ அதிரடி: மன்செஸ்டர் சிற்றி வெற்றி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில், நியூகாசில் யுனைட்டட் அணிக்கெதிரான போட்டியில், மன்செஸ்டர் சிற்றி அணியின் சேர்ஜியோ அகுவேரோவின் அதிரடியான 5 கோல்களின் துணையோடு, அவ்வணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டியின் 18ஆவது நிமிடத்தில் அலெக்சான்டர் மிட்ரோவிச் பெற்ற கோலின் உதவியுடன் நியூகாசில் யுனைட்டட் முன்னிலை பெற, முதற்பாதி முடியும் நேரத்தில் சேர்ஜியோ அகுவேரோ கோலொன்றைப் பெற, 1-1 என முதற்பாதி நிறைவடைந்தது.

இரண்டாவது பாதியில் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய மன்செஸ்டர் சிற்றியும் அகுவேரோவும், நியூகாசில் யுனைட்டட் அணிக்கு பலத்த அடியை வழங்கினர். 49ஆவது, 51ஆவது, 60ஆவது, 62ஆவது நிமிடங்களில் சேர்ஜியோஅகுவேரோ கோல்களைப் பெற்றதோடு, 54ஆவது நிமிடத்தில் கெவின் டி பிரையுடன் கோலொன்றைப் பெற்றார். இதன்படி, மன்செஸ்டர் சிற்றி அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஏனைய போட்டிகளில், வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் அணிக்கெதிரான போட்டியில் கிறிஸ்டல் பலஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கிலும், அஸ்டல் வில்லா அணிக்கெதிரான போட்டியில் ஸ்டோக் சிற்றி அணி 1-0 என்ற கோல் கணக்கிலும், நோர்விச் சிற்றி அணிக்கெதிரான போட்டியில் லெய்செஸ்டர் சிற்றி அணி 2-1 என்ற கோல் கணக்கிலும், செல்சி அணிக்கெதிரான போட்டியில் சௌதம்டன் அணி 3-1 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்றன.

ஏ.எப்.சி போர்னேமௌத் - வட்போர்ட் அணிகளுக்கிடையிலான போட்டியும் (1-1), சண்டர்லான்ட் - வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணிகளுக்கிடையிலான போட்டியும் (2-2) சமநிலையில் முடிவடைந்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .