2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஆப்கானிஸ்தான் பயிற்சியாளராக இன்ஸமாம்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 02 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவரான இன்ஸமாம் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆப்கானிஸ்தானின் எதிர்வரும் சிம்பாப்வே சுற்றுபயணத்துக்கு மாத்திரமே ஆரம்பத்தில் இன்ஸமாம் கைச்சாத்திடப்பட்டுள்ளபோதிலும், அவரின் ஒப்பந்த காலம் இரண்டு வருடம்  வரை நீடிக்கும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷாஃபிக் ஸ்டனிக்ஸாய் தெரிவித்துள்ளார். 

இன்ஸமாம்  2012-13 காலப்பகுதியில் குறுகிய காலத்துக்கு பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக பணிபுரிந்ததே அவரின் இறுதியாக சர்வதேச அணியுடன் பயிற்சியாளராக செயற்பட்ட சந்தர்ப்பமாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .